கோவை அண்ணா பல்கலையின்கீழ் 101 கல்லூரிகள்; மகளிருக்கு 9 கல்லூரிகள்
கோவை அண்ணா பல்கலையின்கீழ் 101 கல்லூரிகள்; மகளிருக்கு 9 கல்லூரிகள்
UPDATED : ஆக 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை அண்ணா பல்கலையின் கீழ் 101 கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் மகளிருக்கு மட்டும் ஒன்பது கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அண்ணா பல்கலை பதிவாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை அண்ணா பல்கலையின் கீழ் எட்டு மாவட்டங்களில் 99 இன்ஜி., கல்லூரிகள் செயல்படுகின்றன. தற்போது இதன் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இன்டஸ் இன்ஜி., கல்லூரி, தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த ஆண்டு மட்டும் கோவை அண்ணா பல்கலையுடன் புதிதாக ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற 28 கல்லூரிகள் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அண்ணா பல்கலையின் கீழ் கோவை மாவட்டத்தில் 43 இன்ஜி., கல்லூரிகள், தர்மபுரியில் நான்கு கல்லூரிகள், ஈரோட்டில் 13 கல்லூரிகள், கரூரில் மூன்று கல்லூரிகள், கிருஷ்ணகிரியில் நான்கு கல்லூரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 23 கல்லூரிகள், சேலத்தில் 10 கல்லூரிகள், நீலகிரியில் ஒரு கல்லூரி செயல்படுகின்றன.
கோவை, ஈரோட்டில் தலா ஒரு கல்லூரி, நாமக்கல்லில் நான்கு கல்லூரிகள், சேலத்தில் மூன்று கல்லூரிகள் என ஒன்பது இன்ஜி., கல்லூரிகள் மகளிருக்காக மட்டும் நடத்தப்படுபவை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

