முதுகலை ஆசிரியர் தேர்வு: முழுமையான பட்டியல் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வு: முழுமையான பட்டியல் வெளியீடு
UPDATED : ஆக 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பாட வாரியாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஆயிரத்து 122 முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக தேர்வு செய்தது. இதன் முடிவுகள், கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டன.
அதில், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களையோ, அவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு தேதியையோ வெளியிடவில்லை.
இதனால், பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. குழப்பமான முடிவுகளை வெளியிட்டது குறித்தும், விண்ணப்பதாரர்களின் சந்தேகம் குறித்தும் 8ம் தேதி ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, பாட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டது.
தேர்வு வாரியம் வழங்கிய வரிசை எண், பெயர், வேலை வாய்ப்பு அலுவலக கட்-ஆப் தேதி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த தேதி, அவர்களின் வகுப்பு வாரியான விவரம் ஆகிய அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்த்தலுக்குச் சென்ற ஒவ்வொருவரும், தங்களை விட பதிவு மூப்பு குறைந்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வு வாரியத்தின் இணையதள முகவரி: http://trb.tn.nic.in

