sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அபாயமான நிலையில் மரங்கள்; பட்டதாரிகள் குழு ஆய்வு

/

அபாயமான நிலையில் மரங்கள்; பட்டதாரிகள் குழு ஆய்வு

அபாயமான நிலையில் மரங்கள்; பட்டதாரிகள் குழு ஆய்வு

அபாயமான நிலையில் மரங்கள்; பட்டதாரிகள் குழு ஆய்வு


UPDATED : டிச 09, 2025 10:25 AM

ADDED : டிச 09, 2025 10:26 AM

Google News

UPDATED : டிச 09, 2025 10:25 AM ADDED : டிச 09, 2025 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பெங்களூரில் அபாயமான நிலையில் 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளதாக ஜி.பி.ஏ., ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் கான்கிரீட் சாலை, கால்வாய் அமைப்பது, கட்டடம் கட்டுவது என பல்வேறு காரணங்களால், மரங்கள், மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன.

இதன் விளைவாக மரங்களின் வேர்கள் பலவீனமடைகின்றன. சாலைகளில் முறிந்து விழுந்து, அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. உயிரிழப்பும் நிகழ்கின்றன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், அபாய நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்யும் பணியை, ஜி.பி.ஏ., துவக்கியது.

பெங்களூரின் அபாயமான மரங்களை ஆய்வு செய்யும் பணிகள் நவம்பர் 20 முதல் நடந்து வருகிறது. தற்போது 1,000 க்கும் மேற்பட்ட அபாயமான மரங்கள் அடையாளம் காணப்பட்டன. ஜனவரி இறுதியில், எத்தனை மரங்கள் அபாய நிலையில் உள்ளன என்ற சரியான விபரங்கள் கிடைக்கும்.

இது போன்ற மரங்களை ஆய்வு செய்யும் பணிக்கு, வனம் தொடர்பான பட்டப்படிப்பு முடித்தவர்கள், தாவரவியல் பட்டதாரிகள் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 30,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

மரங்களின் தொழில்நுட்பம் குறித்து, வல்லுநர்கள் மூலமாக, ஆய்வு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அபாய மரங்களை பற்றி, ஏழு பக்கங்கள் கொண்ட தகவல் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வு நடந்த தேதி, மரத்தின் பெயர், எந்த வகையில் அபாயம் ஏற்படும் என்பது குறித்து தகவல் பதிவு செய்யப்படும்.

அபாயமான மரங்கள் உள்ள பஸ் நிலையங்கள், நடைபாதை, பூங்கா உட்பட அனைத்தும் படங்களுடன் ஆய்வறிக்கை தயாராகிறது.

மரங்கள் அபாய நிலைக்கு செல்ல, என்ன காரணம் என்ற தகவலும் கூட, அறிக்கையில் இடம் பெறும். மரத்தின் தண்டுகளை புழுக்கள் தின்றுள்ளனவா, வேருக்கு தீவைத்ததால் சேதமடைந்ததா, மரம் உலர்ந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வில் தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us