தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஆப்கன் வான்வழி தாக்குதல்; தொடரும் மோதல்

பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஆப்கன் வான்வழி தாக்குதல்; தொடரும் மோதல்

பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஆப்கன் வான்வழி தாக்குதல்; தொடரும் மோதல்

5

ADDED : ஜூலை 01, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஜூலை 01, 2026 06:39 PM

5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காபூல்: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சில ஆண்டுகளாக கடும் மோதல் நிலவி வருகிறது. தெஹ்ரிக் - இ - தலிபான் பயங்கரவாதிகளுக்கு, ஆப்கனின் தலிபான் அரசு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஆப்கன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அப்பாவி மக்களின் வீடுகள் மீது குண்டுகளை வீசியதில் 36 பேர் பலியானதாகவும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமம் அந்துள்ளதாகவும் தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு பழி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே புகுந்து ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தலிபான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணங்களில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, தலிபான் அரசு கூறியுள்ளது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாவும், அவர்களின் ஆயுதக் கிடங்குகளும், முகாம்களும் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. காபூல், ஜூலை 2-

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சில ஆண்டுகளாக கடும் மோதல் நிலவி வருகிறது. தெஹ்ரிக் - இ - தலிபான் பயங்கரவாதிகளுக்கு, ஆப்கனின் தலிபான் அரசு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஆப்கன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அப்பாவி மக்களின் வீடுகள் மீது குண்டுகளை வீசியதில் 36 பேர் பலியானதாகவும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமம் அந்துள்ளதாகவும் தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு பழி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே புகுந்து ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தலிபான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணங்களில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, தலிபான் அரசு கூறியுள்ளது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாவும், அவர்களின் ஆயுதக் கிடங்குகளும், முகாம்களும் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us