திமுக ஆட்சியில் கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள், டாக்டர்கள் மீது வழக்கு; அமைச்சர் அருண் ராஜ் அதிரடி
திமுக ஆட்சியில் கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள், டாக்டர்கள் மீது வழக்கு; அமைச்சர் அருண் ராஜ் அதிரடி
ADDED : ஜூலை 08, 2026 04:27 PM

சென்னை: கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுவிட்டது என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், நெசவு கூலி தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவம், கடந்த ஆண்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை தற்போதைய தவெக அரசு துவங்கி உள்ளது. ஏற்கனவே, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 08) சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் அருண் ராஜ் கூறியதாவது: கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விட்டது. நாமக்கல் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
