தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

16


UPDATED : ஜூலை 08, 2026 02:45 PM

ADDED : ஜூலை 08, 2026 02:34 PM

Follow on GoogleFavourite on Google

16

UPDATED : ஜூலை 08, 2026 02:45 PM ADDED : ஜூலை 08, 2026 02:34 PM


16
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடத்தை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது அமெரிக்கா அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்று வரும் 2 நாள் நேட்டோ உச்சிமாநாட்டின் இடையே அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை, அது முறிந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். அவர்களுடன் உடன்பாடு எட்டுவது என்பது வெறும் நேர விரயம் மட்டும் தான். அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அதன் முடிவுகளில் எனக்கு உடன்பாடோ, நம்பிக்கையோ இல்லை. அவர்கள் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்,' எனக் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us