தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எப்படியாவது ஆட்சிக்கு வர திமுக குதிரை பேர முயற்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

எப்படியாவது ஆட்சிக்கு வர திமுக குதிரை பேர முயற்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

எப்படியாவது ஆட்சிக்கு வர திமுக குதிரை பேர முயற்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

16


ADDED : ஜூலை 05, 2026 08:55 PM

Follow on GoogleFavourite on Google

16

ADDED : ஜூலை 05, 2026 08:55 PM


16
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக குதிரை பேர முயற்சிகளை திமுக நடத்தியிருப்பதாக தெரிகிறது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் கூறி உள்ளார்.

அவரது பேட்டி;

ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் இப்படிப்பட்ட குதிரை பேர முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது.

சிலநாட்களுக்கு முன்னால் விரைவில் ஆட்சி மாற்றம் என ஸ்டாலின் பேசியதின் பின்னணி என்ன என்பது இப்போது தான் தெரிகிறது.

தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளில் சில, 2 மாத கால தவெக அரசில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பெண் படை, விவசாய கடன் தள்ளுபடி என சில அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை வரும் போது முழுமையான, என்ன மாதிரியான பொருளாதார கொள்கையை தவெக அரசு கடைபிடிக்க போகிறது? திமுக ஆட்சியில் தொழிலாளர் பிரச்னை, பணி நியமனங்கள், ஆசிரியர் அரசு ஊழியர்கள் பிரச்னை போன்றவற்றில் என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள போகின்றனர் என்பது தெரியவரும்.

நிதிநிலை அறிக்கை வரும் வரை காத்திருக்கலாம். நிதிநிலை அறிக்கையின் மூலம் என்ன பாதையில் இந்த அரசு செல்ல போகிறது என ஓரளவு வெளிச்சம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us