தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை
ADDED : டிச 09, 2025 09:58 AM

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6), தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 199 ரூபாய்க்கு விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வாரத் தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், இன்று (டிசம்பர் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.199க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

