கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க முடிவு
கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க முடிவு
ADDED : ஜூலை 02, 2026 07:21 PM

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க, முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பர் மாதம் நடந்த த.வெ.க., பிரசார நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு த.வெ.க., தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ளார். பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு சென்று, உயிரிழந்தவர் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளார். இதை தொடர்ந்து, 41 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களில், தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கும் உத்தரவையும், முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.
இதற்காக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பணி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது.
