மாநில அந்தஸ்து கோரி விஜய்யும் பேசி இருப்பதை வரவேற்கிறேன்; சீமான் ஆதரவு
மாநில அந்தஸ்து கோரி விஜய்யும் பேசி இருப்பதை வரவேற்கிறேன்; சீமான் ஆதரவு
ADDED : டிச 09, 2025 06:22 PM

சென்னை: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலில் நான்தான் கூறியிருந்தேன். தற்போது விஜய்யும் பேசி இருப்பதை வரவேற்கிறேன் மகிழ்ச்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: நான் 2 நாட்களுக்கு முன் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உளுந்தூர்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினேன். அதை பற்றி எத்தனை கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டீர்கள்? விஜய் பேசியதற்கு மட்டும், ஒரு சீட்டு எடுங்கனு கிளி ஜோசியக்காரன் மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
விஜய்க்கு முன்னாடி மாநில அந்தஸ்து கோரியது நான்தான். மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும் என்று நான் தான் முதன்முதலில் புதுச்சேரிக்காக குரல் கொடுத்தேன். அதுக்கு அப்புறம்தான் ரங்கசாமியே போய் மனு கொடுத்தார்.
நான் முன் வைத்த அந்த கோரிக்கை வலுப்பெறுகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி, வரவேற்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

