முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
ADDED : டிச 07, 2025 12:49 PM

புதுடில்லி: இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரத்தில் முழு தகவல் தெரியாமல் பேசக்கூடாது என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது; இது ஒரு அரசியல் விவகாரம் அல்ல, பொதுப் பிரச்னை. ஒப்பந்த செலவுகளைக் குறைத்து, அதிக விமானங்களை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். போட்டி அதிகரிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிக் கொண்டே இருக்கிறேன்.
நாட்டில் விமானப் போக்குவரத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் துறையில் மக்கள் நுழைவதற்கு வாய்ப்புகள் உருவாகின்றன. அரசும் அதையேத்தான் விரும்புகிறது. முழு தகவல் தெரிந்தால் மட்டும் அவர் (ராகுல்) பேசுவது நல்லது, இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 6 நாட்களாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசின் மீது குறை கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல், 'இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு காரணமே மத்திய அரசின் அணுகுமுறையே காரணம். விமானங்களின் ரத்து, தாமதம் மற்றும் உதவியில்லாத நிலையால், சாதாரண இந்திய மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து துறைகளிலும் நியாயமான போட்டிக்கு இந்தியா தகுதியுடையது,' இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

