sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வான்வழியை குழப்பமாக மாற்றிக்கொடுத்து நம் நாட்டு விமான சேவையை முடக்க சதியா?

/

வான்வழியை குழப்பமாக மாற்றிக்கொடுத்து நம் நாட்டு விமான சேவையை முடக்க சதியா?

வான்வழியை குழப்பமாக மாற்றிக்கொடுத்து நம் நாட்டு விமான சேவையை முடக்க சதியா?

வான்வழியை குழப்பமாக மாற்றிக்கொடுத்து நம் நாட்டு விமான சேவையை முடக்க சதியா?


ADDED : நவ 12, 2025 03:12 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டில் கடந்த வாரம் பெரும் இடையூறு ஏற்பட்டது. வான்வழிக்கான ஜி.பி.எஸ்., தகவல்கள் குழப்பமாக மாற்றிக் கொடுக்கப்பட்ட நிலையில், நம் நாட்டு விமான சேவையை முடக்க இந்த சதி நடந்ததா என்பதை கண்டறிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலை மையில் உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.

தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன.

எச்சரிக்கை


நாளொன்றுக்கு, 1,500 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. இதனால், டில்லி விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

கடந்த வாரம், டில்லி விமான நிலையத்தில் தரையிறங்க விமானங்கள் வழக்கம் போல தரைக்கட்டு அறையை தொடர்பு கொண்டன. ஆனால், விமானிகளுக்கு கிடைத்த ஜி.பி.எஸ்., தகவல்கள் வான்வழியை தவறாக காட்டியதால், அவர்கள் குழம்பி போயினர்.

விமானங்கள் சரியான வழித்தடத்தில் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் இந்த ஜி.பி.எஸ்., தகவல்கள் மிக முக்கியமானவை. இந்தச் சூழலில் விமானத்தின் நிலை, நிலப்பரப்பு குறித்த எச்சரிக்கை தகவல்கள், வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளன.

குறிப்பாக டில்லியில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை வான்வழியை குழப்பமாக மாற்றி காட்டும் ஜி.பி.எஸ்., தகவல்களே கிடைத்ததாக விமானிகள் புகார் அளித்தனர்.

ஜி.பி.எஸ்., தரவுகளில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டன. 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால், பல விமானங்கள் அருகில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால், விமான பயணியர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

தானியங்கி ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், தரை கட்டுப்பாட்டு மையம், பழைய முறைப்படி, 'மேனுவலாக' பணியாற்றும் முறைக்கு தள்ளப்பட்டது.

டில்லி செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கும் நிலையில், டில்லி விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பது அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததா, சைபர் தாக்குதலா, அல்லது நம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளை, 'ஹைஜாக்' செய்வதற்கான சதியா? என பல்வேறு கோ ணங்களில் விசாரணை துவங்கி உள்ளது.

இதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. போலியான செயற்கைக்கோள் சிக்னல்களை உருவாக்கி விமான, 'நேவிகேஷன்' முறைகளை திசை திருப்பும் நவீன சைபர் தாக்குதலாக இருக்கலாம் என் ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சைபர் பாதுகாப்பு என வே, விசாரணைக்காக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கீழ் இயங்கும் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, சைபர் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களை திறமையாக கையாண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us