தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கரூர் சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு நிச்சயம் அரசு பணி; சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு பதில்

கரூர் சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு நிச்சயம் அரசு பணி; சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு பதில்

கரூர் சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு நிச்சயம் அரசு பணி; சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு பதில்

6


ADDED : நவ 04, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 04, 2026 05:45 PM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்தாண்டு, கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக்கூட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். பின்னர், தவெக ஆட்சி அமைத்தவுடன், பலியானவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கியது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.4) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, விளக்கம் அளிக்க அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

பணி ஆணை வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த தமிழக அரசு தரப்பு, பணி வழங்கியதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தது.

மாற்றம் இல்லை எனும் போது பதில் மனுவுக்கு ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். பின்னர், விளக்க மனு தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வழங்கி. விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us