தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

11


ADDED : ஜூலை 06, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : ஜூலை 06, 2026 01:37 PM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி சிறப்பு நிருபர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, திமுக தாக்கல் செய்த வழக்கை நாளை (ஜூலை 07) விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.

கரூரில், 2025 செப்டம்பர், 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.

திமுக வழக்கு

இந்நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயல். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, சுப்ரீம்கோர்ட்டில், தி.மு.க., சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை விசாரணை

இந்த வழக்கை நாளை (ஜூலை 07) விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. இதற்கிடையே வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூருக்கு சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இந்தசூழலில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் போது, முக்கிய உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us