வடஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு
வடஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு
ADDED : டிச 07, 2025 08:52 AM

யுகோன்: வட அமெரிக்காவின் யுகோன் பகுதியில் 7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
வடஅமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் தகவல்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலங்கின. பொதுமக்கள் பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் உணரப்பட்டதாக 911 அழைப்புகள் தங்களுக்கு வந்ததாக வைட்ஹார்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையமும், எந்த சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

