தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பிரதமர் மோடிக்கு உயரிய விருது; இந்தோனேஷியா அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு உயரிய விருது; இந்தோனேஷியா அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு உயரிய விருது; இந்தோனேஷியா அறிவிப்பு

15


ADDED : ஜூலை 07, 2026 12:15 PM

Follow on GoogleFavourite on Google

15

ADDED : ஜூலை 07, 2026 12:15 PM


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

இந்தோனேஷியா நாட்டின் மிக உயரிய விருதான, 'பின்டாங் ஆதிபூர்ணா' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக, அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ அறிவித்தார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். முதற்கட்டமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் பிரபோவ்சுபியான்டோ, பிரதமர் மோடியை வரவேற்றார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 07) இந்தோனேஷியா அதிபர் பிரபோவ் சுபியான்டோவை பிரதமர் மோடி சந்தித்து பேச்சு நடத்தினார். பிறகு இந்தோனேஷியா நாட்டின் மிக உயரிய விருதான, 'பின்டாங் ஆதிபூர்ணா' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக, அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா - இந்தோனேஷியா இடையிலான உறவு தற்போது வலுப்பெற்றுள்ளது. பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறையில் இணைந்து செயலாற்ற உள்ளோம். இரு நாடுகள் இடையில் பிரகாசமான காலம் உருவாகி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கையெழுத்து

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அஸ்த்ரா எம்கே 1 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியாவுடனான இந்தோனேஷியாவின் ஒப்பந்தம் கையெழுத்தானது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us