காதலனுடன் நடப்பதாக இருந்த திருமணம் ரத்து: அறிவித்தார் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
காதலனுடன் நடப்பதாக இருந்த திருமணம் ரத்து: அறிவித்தார் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
ADDED : டிச 07, 2025 02:08 PM

மும்பை: இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடன் நடப்பதாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீராங்கனையும், இந்திய அணி துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோர் காதலித்தனர். இருவருக்கும் பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் நடப்பதாக இருந்தது.
இதற்கென இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமணம் நடப்பதாக இருந்த நவ.,23 அன்று மந்தனாவின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து, மணமகன் பற்றிய பல விதமான தகவல்கள் உலா வரத் தொடங்கின. அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை அறிந்த பிறகே திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மந்தனா, தன் திருமண நிச்சயதார்த்த படங்கள், காதலனுடன் இருக்கும் படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். இதனால் திருமணம் நடக்குமா என்று சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், திருமண விழா நடக்காது என்று மந்தனா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:
கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. நடப்பதாக இருந்த எனது திருமணம் ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்களது குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

