பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
ADDED : டிச 07, 2025 01:30 PM

புதுடில்லி: பார்லிமென்டில் நாளை (டிசம்பர் 8)வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்த சூழலில், நாளை வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் லோக்சபாவில் நடைபெற உள்ளது. அப்போது வந்தே மாதரம் பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
பின்னர், லோக்சபாவில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, எம்பிக்கள் தங்களது கருத்துக்களை பேசுவார்கள் என தெரிகிறது. இதனால் நாளை விவாதம் அனல் பறக்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

