sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

/

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்


ADDED : நவ 14, 2025 06:42 AM

Google News

ADDED : நவ 14, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாம்பரம் பெண் சார் - பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சத்தை பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது, லஞ்ச பணத்தை வாங்கிய ரேவதியை, கையும் களவுமாக கைது செய்தனர். ரேவதிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us