தேஜ கூட்டணி பார்லி குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
தேஜ கூட்டணி பார்லி குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
ADDED : டிச 09, 2025 11:26 AM

புதுடில்லி: டில்லியில் நடந்த தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
டில்லியில் தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜ தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்திய பீஹார் தேர்தலில் மகத்தான வெற்றிக்காக, தேஜ கூட்டணி எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்தக் கூட்டம் குறித்து நிருபர்களிடம் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பீஹார் தேர்தல் வெற்றிக்காக பிரதமருக்கு மாலை அணிவித்து பாராட்டப்பட்டது. நாட்டிற்கும், மாநிலங்களுக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினர். ஒரு விஷயத்தை நான் குறிப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களுக்கு பிரதமர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். சீர்திருத்தங்கள் என்பது பொருளாதார சீர்திருத்தங்கள் அல்லது நிதி சீர்திருத்தங்களை மட்டும் குறிக்காது.
நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக சீர்திருத்தங்களை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். பிரதமர் மோடி மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

