ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
ADDED : ஜூலை 03, 2026 10:10 AM

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 03) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 13,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 01) ஆபரண தங்கம் கிராம், 13,250 ரூபாய்க்கும், சவரன், 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 02) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 13,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,07,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 13,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,200 ரூபாய் உயர்ந்து, 1,08,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாயும் அதிகரித்தது.
இன்றைய நிலவரம்
வெள்ளியும் அதிகரிப்பு
