அமெரிக்க நகரங்களை அழிக்கிறார்கள்; பயணிகள் ரயிலில் கத்திக்குத்து சம்பவத்திற்கு டிரம்ப் கண்டனம்
அமெரிக்க நகரங்களை அழிக்கிறார்கள்; பயணிகள் ரயிலில் கத்திக்குத்து சம்பவத்திற்கு டிரம்ப் கண்டனம்
ADDED : டிச 07, 2025 07:38 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜனநாயகக் கட்சித் தலைவர்களை விமர்சித்தார். அவர்கள் குற்றவாளிகள் மற்றும் ஆவணமற்ற குடியேறிகள் மீது கருணை காட்டுவதன் மூலம் அமெரிக்க நகரங்களை அழிக்கிறார்கள் என டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் சார்லட்டில் பயணிகள் ரயிலில் நடந்த கத்திக்குத்தில், ஒருவர் காயம் அடைந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் நடத்தியதாக, 33 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அந்த நபர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, வட கரோலினா பயணிகள் ரயிலில் தற்போது இரண்டாவது முறையாக கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வட கரோலினாவின் சார்லட்டில் சட்டவிரோத குடியேறியவரால் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சார்லட்டில் என்ன நடக்கிறது?
ஜனநாயகக் கட்சியினர் மற்ற அனைத்தையும் போலவே அதையும் அழித்து வருகின்றனர். அவர்கள் குற்றவாளிகள் மற்றும் ஆவணமற்ற குடியேறிகள் மீது கருணை காட்டுக்கின்றனர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

