'ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய முயற்சிப்பது இனி பலிக்காது'
'ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய முயற்சிப்பது இனி பலிக்காது'
ADDED : நவ 02, 2025 12:23 AM

புதுடில்லி: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்யும் முயற்சி புதிதல்ல. காங்., ஆட்சியில் தடை செய்ய மூன்று முறை முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை மக்களின் பேராதரவுடன் தோற்கடிக்கப்பட்டன,'' என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து' என்றார். இதற்கு பதிலடி கொடுத்து, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே நேற்று கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்யும் முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் பல முறை அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய மூன்று முறை முயற்சிகள் நடந்தன.
மக்கள் மற்றும் நீதித்துறை பேராதரவுடன் அவை முறியடிக்கப்பட்டன. இது வரலாறு.
நாட்டை கட்டியெழுப்பவும், சமூகத்தை வலுப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ்., அயராது பணியாற்றி வருகிறது. அதனால், அதை தடை செய்ய வேண்டும் என்ற முயற்சிகள் இனி ஒருபோதும் பலிக்காது.
ஆர்.எஸ்.எஸ்.,சை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த கால வரலாற்றை காங்., கொஞ்சமாவது ப டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

