sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுகவை நம்பாதீங்க; நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்கள் வேலை: நடிகர் விஜய்

/

திமுகவை நம்பாதீங்க; நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்கள் வேலை: நடிகர் விஜய்

திமுகவை நம்பாதீங்க; நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்கள் வேலை: நடிகர் விஜய்

திமுகவை நம்பாதீங்க; நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்கள் வேலை: நடிகர் விஜய்

3


UPDATED : டிச 09, 2025 12:37 PM

ADDED : டிச 09, 2025 12:25 PM

Google News

3

UPDATED : டிச 09, 2025 12:37 PM ADDED : டிச 09, 2025 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திமுகவை நம்பாதீங்க, உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

புதுச்சேரியில் உப்பளம் துறைமுக திடலில் தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். கரூர் துயரத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் முதல் முறையாக இன்று தான் அவர் பங்கேற்றார்.

பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;

இந்த மத்திய அரசுக்கு தான் தமிழகம் ஒரு தனி மாநிலம். புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். அவர்களுக்கு தமிழகம் தனி, புதுச்சேரி தனி அப்படி என்று இருப்பார்கள். நமக்கு எல்லாம் அப்படி கிடையாது.

நாம் எல்லாரும் வேறு வேறு கிடையாது. நாம் எல்லோரும் ஒன்று தான். தமிழகமும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லோரும் ஒன்றுதான், சொந்தம்தான்.

வேற, வேற வீட்டில், வேற வேற மாநிலத்தில், வேற வேற நாட்டில் இருக்கிறோம் என்பதால் நாம் எல்லோரும் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிட முடியுமா? அது எப்படி முடியும்? ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் போது பாச உணர்வு, அது இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை.

உலகத்தில் எந்த இடத்தில் நம்ம வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லாரும் ஒன்றுதான். நமது உயிர்தான். புதுச்சேரி என்றால் உடனே ஞாபகம் வருவது மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா.

அதுமட்டுமல்ல, மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

1977ல் எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னரே 1974ல் புதுச்சேரியில், இங்கே அவர்கள்(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆட்சி இங்கே அமைந்தது. அதனால் தான் அப்பவே சொன்னார்கள் நமக்காக வந்தவர் எம்ஜிஆர். அவரை தமிழகத்தில் இருப்பவர்கள் மிஸ் பண்ணிவிட வேண்டாம் என்று நமக்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரி தான்.

அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்கமுடியுமா? இங்கிருக்கும் மக்கள் தமிழகம் போலவே கிட்டத்தட்ட 30 வருஷம் என்னை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதனால், இந்த விஜய் தமிழகத்திற்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள்.

அப்படி பண்ணினால் அது தவறு. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பான், அது என் கடமையும் கூட. அதனால் தான் இங்கு நீங்க எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றி பேச இங்கு வந்திருக்கிறேன்.

இந்த புதுச்சேரி அரசாங்கம் பற்றி சொல்லியாக வேண்டும். இது கட்டாயம் தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி கிடையவே கிடையாது. ஏன் என்றால் வேற ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சமே காட்டாமல் இந்த அரசாங்கம் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், நம்ம சிஎம் சார் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழகத்தில் இருக்கும் திமுக அரசாங்கம் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள், பரவாயில்லை.

வரப்போகும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக் கொள்வார்கள். அதை நம்ம மக்கள் பார்த்துக் கொள்வார்கள். (கைகளில் சில தாள்களை எடுத்து வைத்து, அதை வாசிக்க ஆரம்பிக்கிறார் விஜய்)

புதுச்சேரியில் அரசின் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரியை மத்திய அரசு எதிலும் கண்டு கொள்ளவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நல்லாவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுக்கவில்லை?

இங்கு வளர்ச்சி ஏற்பட துணை நிற்கவே இல்லை என்று கேள்விப்படுகிறோம். இந்த புதுச்சேரிக்கு இன்னமும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டு, பல முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த வருஷம் கூட மார்ச் மாதம் 27ம் தேதி ஒரு தீர்மானம் போட்டார்கள். அது மாநில அரசு வேண்டும் என்று கேட்டு, மத்திய அரசுக்கு அனுப்பும் 16வது தீர்மானம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரைக்கும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு எதுவுமே செய்யவில்லை. இங்கு ஒரு ஐ டி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதை பத்தி யார் பேசுனாலும் அது அவர்கள் காதில் விழவே இல்லை.

இங்கே ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் பதவியை விட்டு நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு இன்னொருத்தரை நியமித்து 200 நாட்கள் ஆகவிட்டது. இன்னும் அவருக்கு ஒரு இலாகாவே தரலை. இந்த செயல், சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அந்த மக்களே சொல்கின்றனர்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என்று அந்த பகுதி மக்களே சொல்கின்றனர். குறிப்பாக காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலை மொத்தமாக கைவிட்ட மாதிரி இருக்கிறது. எல்லாம் முன்னேற்றம் அடையணும்.

சுற்றுலாதலமான புதுச்சேரியில் போதுமான பார்க்கிங் வசதி இல்லை. போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை. இதை எல்லாம் மேம்படுத்தணும்.

புதுச்சேரி, கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒண்ணே ஒண்ணு நான் சொல்ல வேண்டும். இந்த திமுகவை நம்பாதீங்க... அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே.

நான் சொன்ன பல கோரிக்கைளை தீர்த்து வைப்பதற்கு நம்ம புதுச்சேரி அரசுக்கும், அதோட மக்கள் திட்டங்களுக்கும் உண்மையாக துணை நிற்க வேண்டும். தமிழகத்தை ஒதுக்குகிற மாதிரி, புதுச்சேரியையும் ஒதுக்கக்கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வாழும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும். யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை.

அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதிய திட்ட தொகை உள்ளிட்ட செலவுகளுக்கே சென்றுவிடுவதால் மீத தேவைக்கு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்களில் கடன் வாங்குகிறது புதுச்சேரி.

இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஒரே வழி... மாநில அந்தஸ்து. போதுமான நிதி வரத்து இல்லாததால் வெளியே கடன் வாங்க வேண்டி உள்ளது. புதுச்சேரி கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்து எடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது இல்லையா? தொழில் வளர்ச்சியும் தேவை. இந்திய அளவில் ரேஷன் கடைகளை இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான்.

மற்ற மாநிலங்களில் இருப்பது போல இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். மீன்பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்கான எப்பவும் துணை நிற்பான்.

வரபோற புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்ம தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

கட்டுப்பாடுகளை மறந்து...!


பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். கர்ப்பிணிகள் முதியோர் வரக்கூடாது. 5000 பேருக்கு மட்டுமே அனுமதி, க்யூஆர் கோடு இவற்றில் அடங்கும். இதில் ஒரே க்யூஆர் கோடை பயன்படுத்தி பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்கூட்ட வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளை தாண்டி பெண்கள், இளைஞர்கள் முன்னேறி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தும், எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us