தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எதிர்க்கட்சி இளவரசர்களை இளைஞர்கள் நிராகரித்துவிட்டனர்; பாஜ தேசிய தலைவர் சாடல்

எதிர்க்கட்சி இளவரசர்களை இளைஞர்கள் நிராகரித்துவிட்டனர்; பாஜ தேசிய தலைவர் சாடல்

எதிர்க்கட்சி இளவரசர்களை இளைஞர்கள் நிராகரித்துவிட்டனர்; பாஜ தேசிய தலைவர் சாடல்

6


ADDED : நவ 04, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 04, 2026 05:40 PM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் தோல்விகளுக்கு சாக்குப்போக்குகளைக் கூறுவதாக பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டினார்.

அவர் பேசியதாவது: இன்றைய இளைஞர்கள் எதிர்க்கட்சி இளவரசர்களை நிராகரித்துவிட்டனர். ராகுல் ஒரு பகுதி நேர அரசியல்வாதி. பாஜ தொண்டர்கள் ஆண்டு முழுவதும் தங்களது பொதுச் சேவையைத் தொடர்வதைப் போலல்லாமல், காங்கிரஸ் தலைவர் தேர்தல்களின் போது மட்டுமே அரசியல் ரீதியாகச் செயல்படுகிறார்.

பாஜ, தேஜ கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும், மக்கள் ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில், பேரணிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். 140 கோடி மக்கள் மோடியைத் தங்கள் பிரதமராகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஒரு காவலாளியாகவும் கருதுகின்றனர்.

தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் தங்களது அமைப்பு ரீதியான பலவீனங்களை ஆராய்வதற்குப் பதிலாக, எஸ்ஐஆர் நடவடிக்கையின் மீது பழி சுமத்துகின்றன. ஊடுருவல்காரர்களை தேர்தல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் பாதுகாக்க முயல்கிறது.

எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் தோல்விகளை ஏற்க மறுக்கின்றன.

தேர்தல் கமிஷனை கேள்வி கேட்கின்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். வறுமையை ஒழிப்போம் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது.

வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து நிராகின்றனர். அவர்கள் தங்கள் தோல்விகளிலிருந்து பாடம் கற்க தவறிவிட்டனர். இவ்வாறு நிதின் நபின் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us