தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/செந்தில் பாலாஜி செலவழித்தது ரூ.20 லட்சம்; தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த கணக்கு விபரம்

செந்தில் பாலாஜி செலவழித்தது ரூ.20 லட்சம்; தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த கணக்கு விபரம்

செந்தில் பாலாஜி செலவழித்தது ரூ.20 லட்சம்; தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த கணக்கு விபரம்

12


UPDATED : ஜூலை 01, 2026 06:41 AM

ADDED : ஜூலை 01, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

12

UPDATED : ஜூலை 01, 2026 06:41 AM ADDED : ஜூலை 01, 2026 02:30 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை தெற்கில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ரூ.20.15 லட்சம் செலவழித்ததாகவும், தி.மு.க., கட்சி சார்பில் தேர்தல் செலவுக்கு ரூ.25 லட்சம் வழங்கியதாகவும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த செலவு கணக்கில் தெரிவித்திருக்கிறார்.

கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரையே செலவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அவர்கள் சமர்ப்பித்த செலவு கணக்கை செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து, ஆணையத்துக்கு அனுப்பினர். தற்போது பொதுமக்கள் பார்வைக்காக, இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள், தங்களது கட்சி தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு தலா ரூ.25 லட்சம் தந்ததாக தெரிவித்துள்ளனர்.

கோவை தெற்கில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ரூ.20.15 லட்சம் செலவழித்ததாக கணக்கு காட்டியிருக்கிறார். தி.மு.க., கட்சியில் இருந்து தேர்தல் செலவுக்கு ரூ.25 லட்சம் வழங்கியதாகவும், ரூ.2 லட்சம் சொந்தப் பணம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பிரசாரம் செய்ய பொதுக்கூட்டம் நடத்தியதற்கு ரூ.66,165, தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரம் செய்ததற்கு ரூ.1,77,358, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் செய்ததற்கு ரூ.2,66,718 செலவானதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வேலுமணி செலவு எவ்வளவு? கோவை தெற்கில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், ரூ.23.63 லட்சம் செலவு செய்ததாகவும், தனது சொந்த பணம் என்றும், கட்சி தலைமை பணம் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தொண்டாமுத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி ரூ.23.56 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளார்.

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், ரூ.24.94 லட்சம், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் ரூ.14.75 லட்சம், த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அமைச்சர் சம்பத்குமார் ரூ.12.93 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்ற, கொ.ம.தே.க.,வை சேர்ந்த நித்தியானந்தன் ரூ.29.77 லட்சம் செலவழித்ததாகவும், தி.மு.க., கட்சி தலைமை தேர்தல் செலவுக்கு ரூ.25 லட்சம் வழங்கியதாகவும் கூறியிருக்கிறார். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், ரூ.31.52 லட்சம் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us