தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டெப் பிரீமியர் லீக்  கிரிக்கெட் போட்டி மாகி சாம்பியன்: புதுச்சேரிக்கு 2ம் இடம்

டெப் பிரீமியர் லீக்  கிரிக்கெட் போட்டி மாகி சாம்பியன்: புதுச்சேரிக்கு 2ம் இடம்

டெப் பிரீமியர் லீக்  கிரிக்கெட் போட்டி மாகி சாம்பியன்: புதுச்சேரிக்கு 2ம் இடம்


ADDED : ஜூலை 01, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி டெப் பிரீமியர் லீக் 2026, கிரிக்கெட் போட்டியில், மாகி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், புதுச்சேரி டெப் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் போட்டி, கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் சேதராப்பட்டு முதன்மைச் சாலையில் உள்ள மைதானத்தில் நடந்தது. முதன்மை விருந்தினராக புதுச்சேரி கிரிக்கெட் சங்க  தலைமை நிர்வாக அதிகாரி மயங்க் ஏ மேத்தா, நாணயத்தை சுண்டி போட்டியை  துவக்கி வைத்தார். 

இப்போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், மாகி அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. புதுச்சேரி அணி இரண்டாம் இடம் பிடித்தது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் சட்ட ஆலோசகர் சரவணன், துவக்க உரையாற்றினார்.  

கவுரவ விருந்தினர்களாக, எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், நாராயணசாமி, யுக்டோ அறக்கட்டளை சதீஷ்குமார், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீச் டவுன் தலைவர் செல்வகுமார், செயலாளர் திருநாவுக்கரசு, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீனிக்ஸ் ராஜபிரபாகரன்,  ஈட்டன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட் உற்பத்தி இயக்குனர் ஜோசப் வில்சன், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் நிர்வாகக் குழு உறுப்பினரும், புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் கவுரவ பொதுச் செயலாளர் பசீத், தொடரின் போட்டிச் செயலாளர் சாத்தியபுவனம், ஐயப்பன், மதன்மோகன், ஹபில்லா பரிசுகளை வழங்கி, வீரரர்களை உற்சாக்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us