/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சோதனை
/
ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சோதனை
ADDED : ஏப் 28, 2024 04:05 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை போலீசார், ரவுடிகளின் வீடுகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் தொடர் குற்ற சம்பவங்கள் எதிரொலியாக ரவுடிகளின் வீடுகளில் திடீர் ஆய்வு செய்ய டி.ஜி.பி., சீனிவாஸ் உத்தரவிட்டார். அதன்படி, முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசார் நேற்று போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை செய்தனர். அதில், ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த இளைஞர்களை பிடித்து, பல்வேறு அறிவுரைகள் வழங்கி, அனுப்பி வைத்தனர்.

