/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
/
தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : டிச 02, 2025 04:44 AM
காரைக்கால்: காரைக்காலில் தனியார் பள்ளி ஆசிரியரின் வீட்டை உடைந்து 15 சவரன் தங்க நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் எம்.எம்.ஜி., நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த நாகராஜன். தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கும்ப கோணத்தில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.
மீண்டும் நேற்று காலை வீட்ற்கு வந்து பாத்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின் உள்ளே சென்று பாத்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து செயின், தேடு, வலையல் உள்ளிட்ட 15 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
தகவல் அறிந்த எஸ்.பி., சுபம் கோஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

