/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு
/
3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு
3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு
3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு
ADDED : மார் 15, 2024 05:49 AM

புதுச்சேரி: மூன்று நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்களை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், மத்திய அரசின் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.16 லட்சம் மதிப்பில் 3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
இவற்றை, முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
மாநிலத்தில் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் சென்று கால்நடைகளுக்கு மருத்துவம் செய்யும் வகையிலான அனைத்து வசதிகளும் இந்த கால்நடை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதுச்சேரி பிராந்தியத்திற்கும், ஒன்று காரைக்காலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார், அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., கால்நடை நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் கலந்து கொண்டனர்.