/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை தீவிரம்
/
போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை தீவிரம்
போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை தீவிரம்
போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை தீவிரம்
ADDED : டிச 02, 2025 04:45 AM
புதுச்சேரி: நாட்டையே உலுக்கும் வகையில் புதுச்சேரியில் பல கோடி ரூபாய் போலி மருந்து மோசடி மற்றும் மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
அதைத்தொடர்ந்து சன் பார்மா நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துகள் புதுச்சேரி மருந்தகங்களில் விற்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் பணியில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை மருந்தகங்களில் சன் பார்மா பெ யரில் விலை அதிகம் உள்ள நீரிழிவு, நரம்பு, மகப்பேறு உள்ளிட்ட 40 மருந்துகளின் உண்மை தன்மையை கண்டறிவதறகு, இதன் விவரங்களை அறிய கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுளளது. இதில் தங்களிடம் உள்ள சன் பார்மா நிறுவனத்தின் குறிப்பிடப்பட்ட 40 மருந்துகளின் பேட்ச் நம்பர், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, வாங்கிய தேதி, விநியோகஸ்தர், வாங்கப்பட்ட பில் இன்வாய்ஸ் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தருவ தற்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தங்களிடம் உள்ள மருந்து விபரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 300க்கு மேற்பட்ட மருந்தகங்கள் நேற்று மருந்து கட்டுப்பாட்டு துறையினரிடம் வழங்கியுள்ளனர்.

