/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரும்பி வராத 1 லட்சம் வாக்காளர் படிவங்கள் அரசியல் கட்சிகளுடன் பட்டியலை பகிர்ந்தது தேர்தல் துறை
/
திரும்பி வராத 1 லட்சம் வாக்காளர் படிவங்கள் அரசியல் கட்சிகளுடன் பட்டியலை பகிர்ந்தது தேர்தல் துறை
திரும்பி வராத 1 லட்சம் வாக்காளர் படிவங்கள் அரசியல் கட்சிகளுடன் பட்டியலை பகிர்ந்தது தேர்தல் துறை
திரும்பி வராத 1 லட்சம் வாக்காளர் படிவங்கள் அரசியல் கட்சிகளுடன் பட்டியலை பகிர்ந்தது தேர்தல் துறை
ADDED : டிச 07, 2025 06:32 AM

புதுச்சேரி: சேகரிக்க முடியாத 1 லட்சம் பேரின் தற்காலிகப் பட்டியல் அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டது.
புதுச்சேரியில் வாக்காளர் படிவங்களை வரும் 11ம் தேதிக்குள் பூர்த்தி செய்து திருப்பி தர வேண்டும். இருப்பினும் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இன்னும் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திருப்பி தரவில்லை. இது குறித்த தகவல்களைஅரசியல் கட்சிகளுடன் தேர்தல் துறை பகிர்ந்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலின் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு தீவிர திருத்தத்தின் சேகரிப்புப் படிவங்கள் திரும்ப பெறப்படுவது நிறைவடைய உள்ளது.வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் படிவங்களைச் சமர்ப்பித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் இடம்பெறும். எனினும், சில வாக்காளர்களிடமிருந்து இடமாற்றம், நீக்கப்பட்டது, டூப்ளிகேட் என்ட்ரி போன்ற பல்வேறு காரணங்களால் எஸ்.ஐ.ஆர்., படிவங்களைச் சேகரிக்க முடியவில்லை.
சேகரிக்க முடியாத படிவங்களின் தற்காலிகப் பட்டியல் அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டது. பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களில், பூத் நிலை முகவர்களுக்கும் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் பூத் நிலை அலுவலர்களால் புதுப்பிக்கப்பட்ட பகுதி வாரியான பட்டியல்கள் வழங்கப்படும்.
இது சேகரிக்க முடியாத வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கவும், மேலும் வாக்காளர்கள் பூத் நிலை அலுவலர்களிடம் விவரச் சேகரிப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்கத் தேவைப்படும் இடங்களில் அவர்களுக்கு உதவும்.
இந்தப் பட்டியல் தற்காலிகமானது மட்டுமே. எஸ்.ஐ.ஆர்.,சேகரிப்புப் படிவங்களை வரும் 11ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்படும் படிவங்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

