/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து மாபியா வீட்டில் சோதனை; பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
/
போலி மருந்து மாபியா வீட்டில் சோதனை; பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
போலி மருந்து மாபியா வீட்டில் சோதனை; பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
போலி மருந்து மாபியா வீட்டில் சோதனை; பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
ADDED : டிச 07, 2025 05:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், போலி மருந்து மாபியா வீட்டை உடைத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கின.
போலி மருந்து குறித்து பிரபல சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா வள்ளியப்பன், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதன்படி, சீர்காழி ராணா, காரைக்குடி மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களின் தகவலில், ராஜா, போலி மருந்துகள் தயாரித்த கிடங்குகள் மற்றும் கம்பெனியை உடைத்து சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்து, 'சீல்' வைத்தனர்.
தொடர்ந்து கோர்ட் அனுமதி பெற்று, புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகமான 'பார்ம் ஹவுஸ்' மற்றும் 'ஸ்ரீ சன் பார்மா' அலுவலகம் மற்றும் கிடங்குகளில் மூன்று நாள் சோதனை நடத்தி, 36 நிறுவனங்களின் 1,000 வகை மருந்துகளை, ஒரு ஒரிஜினலுக்கு நான்கு போலி என்ற விகிதத்தில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டு பிடித்து சீல் வைத்தனர்.
அதை தொடர்ந்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, எஸ்.பி., பழனிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆன்ட்ரோ, சீனிவாசன் ஆகியோர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம், ஜெயா நகர் அப்பார்ட்மென்டில் உள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜாவின் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.
அங்கு, மூன்று அறைகளில் உள்ள பீரோக்களை உடைத்து போலி மருந்து தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியது, போலி மருந்துகள் விற்றதற்கான ஆவணங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வைர நகைகள், 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இரவு, 10:00 மணிக்கு வீட்டை மீண்டும் பூட்டி, சோதனை நடத்த கோர்ட் வழங்கிய உத்தரவு நகலை ஒட்டினர்.

