/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

ADDED : நவ 14, 2025 01:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரியின் நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவைக்கி வைத்து பேசுகையில், 'தான் பிறந்து வளர்ந்த வழுதாவூர் அருகில் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கல்லுாரி ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவ மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் தியாகத்தினை உணர்ந்து சிறப்பாக படிக்கவேண்டும்' என்றார்.
பாரத் கல்வி குழுமத் தலைவர் சந்தீப் ஆனந்த், நிர்வாக இயக்குனர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த், ரக் ஷிகா சந்தீப் ஆனந்த், மருத்துவ கண்காணிப்பாளர் போஸ்கோ சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவினை கல்லுாரி நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாக இயக்குனர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த்,மாணவர்களுக்கான உறுதிமொழியினை வழிமொழிந்தார். மாணவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி அன்புசெய்திருந்தார்.