sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு அரசின் கண்ணெதிரே நெருப்பில் கலந்த காரிகை வில்லியனுாரில் துயர வரலாற்று சம்பவம்

/

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு அரசின் கண்ணெதிரே நெருப்பில் கலந்த காரிகை வில்லியனுாரில் துயர வரலாற்று சம்பவம்

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு அரசின் கண்ணெதிரே நெருப்பில் கலந்த காரிகை வில்லியனுாரில் துயர வரலாற்று சம்பவம்

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு அரசின் கண்ணெதிரே நெருப்பில் கலந்த காரிகை வில்லியனுாரில் துயர வரலாற்று சம்பவம்


ADDED : டிச 07, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1735ம் ஆண்டு… புதுச்சேரியின் கவர்னராக இருந்த துய்மாவின் காலம் அது. அந்த சமயம், வில்லியனுார் அடுத்த சிறு கிராமத்தில் பரவியிருந்த அமைதியைப் பிளந்து கொண்டு தகவல் காட்டு தீ போல் பரவியது. அந்த கிராமத்தில் ஒரு பிராமணன் இறந்திருந்தான். ஒரு இளம்பெண் உடன்கட்டை ஏறத் தயாராகிறாள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி, புதுச்சேரியை சோகத்தில் ஆழ்த்தியது.

மரணத்தால் இருண்ட அந்த வீட்டின் வாசல்களில், புழுதியும் புலம்பல்களும் அலை மோதின. இழவு வீட்டிலிருந்து 200 அடி துாரத்தில், ஆயிரம் கண்கள், மவுன கேள்விகள், எதிர்பார்ப்பும் அச்சமும் கலந்த சுவாசங்களுடன் காத்திருந்தன.

அங்கே, இரண்டு அடி உயரத்தில் விறகுக் கட்டைகளால் குவிக்கப்பட்ட சிதை, ஒரு மலையைப் போல மேலெழுந்து, அந்த கிராமத்தின் மனசாட்சியைச் சோதிக்கத் தயார் நிலையில் இருந்தது.

குல வழக்கப்படி, கணவனின் உடலை உட்கார்ந்த நிலையில் சிதையில் அமர்த்தினர். அவரது உயிரற்ற முகத்தில் அண்மையில் அனுபவித்த வாழ்க்கையின் தடயங்களும், மரணத்தின் அமைதியும் ஒன்றாக கலந்திருந்தது.

அதன் அருகில் உடன்கட்டை ஏறப் போகும் 17 வயதுள்ள இளம் பெண்… இன்னும் சிறு வயது மணத்தை கூட உதிர்காத இளமை. மணமகளைப் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அவள் முகத்தில் விசித்திர அமைதி.

பொன்நகை ஒளியும், புதிய புடவையின் ததும்பும் வண்ணங்களும், அவள் எதிர்கொள்ளப் போகும் கொடுமையான முடிவை மறைக்க முடியவில்லை. அவள் நடந்துகொண்டே வந்தாள். அவளது ஒவ்வொரு அடியும் விதியை நோக்கிச் செல்லும் மவுன பயணம்போல் இருந்தது.

சம்பவம் பிரெஞ்சு அரசின் செவியில்பட்டது. பிரெஞ்சு அரசின் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் கண்களில் பதட்டமும், குரலில் நம்பிக்கையும் இருந்தது. அவளை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள் அவளிடம் பேசினர். உயிர் ஒரு விலைமதிப்பற்ற வரம்… அரசாங்கம் உன் வருங்காலத்தை பாதுகாக்கும்… இந்த கொடூர மரணத்தை ஏற்காதே…ஆனால் அவள் மவுனம் பேணி நின்றாள். அது சாதாரண மவுனம் அல்ல.

ஒரு சமூகம் விதித்த அடிமைத்தனத்தின் நெருப்பில் சுட்டெரிந்த மவுனம். அவள் கண்களில் ஒளியானது ஒரு உறுதியோடு கலந்த அமைதி. அங்கே மரண பயம் இல்லை. எதிர்ப்பும் இல்லை…

ஆனால் வேதனை மறைக்கப்பட்டிருந்தது.

அவள் கணவனின் உடலை ஒரு முறை கட்டி அணைத்தாள். அவரது உயிரற்ற உடலோடு அவள் பகிர்ந்த அந்த ஒரு அணைப்பு, அவளது வாழ்நாள் முழுமையின் கடைசி உயிர்த்துளியைப் போன்றது.

பின்னர் அவள் அணிந்திருந்த நகைகள், காதணிகள், மாலை, மூக்குத்தி ஒன்றன்பின் ஒன்றாக கழற்றி அவற்றை கூட்டத்தில் இருந்த பெண்களிடம் வீசினாள். அந்த பொன் நகைகளின் ஒலியில் ஒரு வாழ்வின் முடிவின் கண்கலங்கும் இசை ஒலித்தது. பின் புடவையையும் கழற்றி, வெறும் உள்ளாடையுடன் கைகளை கூப்பி வணங்கினாள்.

கிராமத்தின் முன், கடவுளின் முன், விதியின் முன்… சிதையை மூன்று முறை வலம் வந்தாள். ஒவ்வொரு வலமும் அவள் உலகைவிட்டு விலகும் ஒரு படி. சிதையின் மீது அமர்ந்தாள். கணவனின் தலையை தன் மடியில் சாய்த்துப் பிடித்தாள்.

அவளது முகத்தில் இன்னும் அதே அமைதி…

அவளது மார்பில் இன்னும் துடித்துகொண்டிருந்த உயிரின் சூடு. அங்கிருந்த பிரெஞ்சு அதிகாரிகளின் இதயம் துடித்தது. இன்னும் ஒரு நொடியில் அவளை காப்பாற்ற முடியுமோ என்ற கனவுடன் அருகே சென்று வேண்டினர். வெளியே வா… தயவு செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்... ஆனால் அவள் மவுனம்.

மரணத்தை நோக்கி தன்னை ஒப்படைத்த ஈரமான அமைதி.

மந்திரங்கள் விண்ணை நெருக்கின. உற்றார் உறவினர் வணங்கிகொண்டே சுற்றினார்கள். அந்த இறுதி நொடியில், அவளது கைகள் கணவனின் கைகளோடு கட்டப்பட்டன. உயிரும் சடலமும் ஒன்றுக்கொன்று கூடிய ஒரு துயர சங்கிலி. தீ மூட்டப்பட்டது. விறகுகள் பொங்கி எழுந்தன.

அவளைச் சுற்றி கொதித்த தீ நாக்குகள் தாவின. அவளது முகத்தில் சலனமில்லை. அவள் உருவம் கருகியபோதும், அவள் குரல் எழவில்லை. அவளிடம் பயமில்லை. அவள் உயிரே தீக்குள் மவுனமாக உருகியது.

அந்த மவுனம் அங்கிருந்தவர்களின் இதயங்களை ஆயிரம் தீப்பிழம்புகளாகத் துளைத்தது. தீயுடன் சாம்பலான ஒரு உயிரும்… சமுதாயத்தின் மனசாட்சியும் கணவன் - மனைவி சேர்ந்து சாம்பலாயினர்.

ஆனால் உண்மையில், அந்தத் தீ நெருப்பில் சாம்பலானது ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல. ஒரு சமுதாயத்தின் கொடூர பாரம்பரியம். வில்லியனூரின் அந்தச் சிதைமேடு, அடுத்த பல தலைமுறைகளிலும் ஒரு மவுனக்குரலாய், துயரம் நிரம்பிய அழிக்க முடியாத நினைவாகவே வரலாற்று பக்கங்களில் இன்றும் நிற்கிறது.






      Dinamalar
      Follow us