/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை

ADDED : டிச 02, 2025 04:45 AM
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை கவர்னர் அமைக்க வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து பல மாநிலங்களிலும் விற்பனை செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை அளிக்கிறது . கடந்த நான்காண்டுகளில் போலி மதுபான ஆலை , கள்ள சந்தன மர ஆலை, கஞ்சா கடத்தல் விற்பனை போன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது போலி மருந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மாநிலத்திற்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த குற்றத்தை கண்டுபிடிக்க உத்தரவிட்ட கவர்னர் பாராட்டுக்கும் உரியவர்.
இது குறித்து வைத்திலிங்கம் எம்.பி., பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இதில் உண்மை இல்லை என்றால் முதல்வரோ அல்லது சட்டசபையை நடத்துபவரோ அல்லது இந்த இரட்டை இஞ்சின் ஆட்சியை நடத்தும் என்.ஆர்.காங்., பா.ஜ., மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லை எனில் இக்குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவே அர்த்தம்.
இந்தக் குற்றத்தினை சாதாரண காவல்துறை விசாரணையால் வெளிக்கொணர முடியாது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர சிறப்புப் புலனாய்வுக் குழுவை கவர்னர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.