/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
/
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
ADDED : டிச 02, 2025 04:41 AM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் விழா நடந்தது.
விழாவிற்கு, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார்.
துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி கண்மணி கிரியேஷன்ஸ் ராஜா குழுவினரின் 'வீமனின் வெற்றி' புராண நாடகம் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசி ரியர் முருகவேல் சிறப்புரை யாற்றினர்.
கோவிந்தராசு தலைமையில் 'மனம் போற்றும் மன்னர் மன்னன்' தலைப்பில் பாவரங்கமும், பாரதிதாசன் அறக்கட்டளை பாரதி தலைமையில் மகிழ்வுரை நடந்தது.
தொடர்ந்து, கண்ணன், சண்முகம், எழுமலை, ராமமூர்த்தி, வாசுதேவன், சாந்தி, சங்கரதாசு ஆகியோருக்கு, சங்கரதாசு சுவாமி கள் விருதுகள் வழங்கப்பட்டது.
ஆட்சிக்குழு ஆனந்தராசன் நன்றி கூறினார்.