/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பல லட்சம் பொருட்கள் பறிமுதல்
/
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பல லட்சம் பொருட்கள் பறிமுதல்
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பல லட்சம் பொருட்கள் பறிமுதல்
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பல லட்சம் பொருட்கள் பறிமுதல்
ADDED : டிச 07, 2025 06:41 AM

புதுச்சேரி: சைபர் கிரைம் கும்பலுக்கு வங்கி கணக்குகள் வழங்கிய வழக்கில், கைதான இருவரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சைபர் கிரைம் கும்பலுக்கு, வங்கி கணக்குகள் தொடங்கி கொடுத்தது தொடர்பாக கடந்த மாதம் 7 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர்களில் முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த தாமஸ் (எ) ஹயகிரிவா, கணேசன் ஆகியோரை கடந்த 4ம் தேதி சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இருவரும் சென்னையில் வீடு வாடகை எடுத்து கேமிங் சென்டர் போல் வைத்து நடத்தி, ஆன்லைன் மூலமாக இளைஞர்களிடம் பண ஆசையை துாண்டி வங்கி கணக்கை பெற்று வந்தனர். வங்கி கணக்குகளை ஆன்லைன் மூலம் பணத்தை, வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். அந்த பணத்தை ( யு.எஸ்.டி.டி) டாலராக டெலிகிராம் செயலி மூலம் மாற்றியது தெரியவந்தது.
இவர்கள் தங்கியிருந்த சென்னையில் உள்ள வாடகை வீட்டை சோதனை செய்ததில், பல லட்சம் மதிப்புள்ள கம்யூட்டர் கேமிங் சாதனங்கள், கமிஷன் பணம் மூலம் வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
கம்ப்யூட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து, தாமஸ் (எ) ஹயகிரிவா, கணேசன் இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

