/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1கோடியை வைத்துகொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை அதிகாரியிடம் அவேசமாக பேசிய அமைச்சரின் வீடியோ வைரல்
/
ரூ.1கோடியை வைத்துகொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை அதிகாரியிடம் அவேசமாக பேசிய அமைச்சரின் வீடியோ வைரல்
ரூ.1கோடியை வைத்துகொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை அதிகாரியிடம் அவேசமாக பேசிய அமைச்சரின் வீடியோ வைரல்
ரூ.1கோடியை வைத்துகொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை அதிகாரியிடம் அவேசமாக பேசிய அமைச்சரின் வீடியோ வைரல்
ADDED : டிச 02, 2025 04:38 AM

காரைக்கால்: காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்யவில்லை என்று அதிகாரிகளை ஆவேசமாக பேசிய அமைச்சர் திருமுருகன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் 'டிட்வா புயல் காரணமாக கடந்த இருதினங்களாக கனமழை பொய்ந்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உணவு வழங்குவதற்கு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் திருமுருகன் அதிகாரிகளுடன் கடந்த 30 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் குழுவுடன் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்ய வேண்டும் என அமைச்சர் திருமுருகன் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று மையங்களில் காத்திருந்த மக்களுக்கு உணவு வரவில்லை. தகவல் அறிந்த அமைச்சர் திருமுருகன் தலத்தெரு உணவு தயார் செய்யும் மையத்திற்கு சென்று பார்த்தபோது உணவு தயார் செய்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அமைச்சர் ஆவேசத்துடன் அதிகாரிகளை பார்த்து பேசுகையில்,மக்களுக்கு வழக்கப்படும் உணவு உரிய நேரத்திற்கு வழங்கவேண்டாமா என அதிகாரிகளிடம் ஆவேசத்துடன் ரூ.1கோடி பணத்தை வைத்துகொண்டு எந்த வேலையும் நடைபெறவில்லை .மூன்று மணிநேரமாக மக்களை அலைக்கழித்துள்ளீர்கள். உணவுக்கா அடித்துகொண்டு இருக்கனுமா இதுதவறான செயல்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்நாளே உணவு வழங்கவேண்டும் எனத் தெரிவித்தும், தாமதித்துள்ளீர்கள். ப
ல்வேறு இடங்களில் உணவு தயார் செய்யும் மையம் இருந்தும், ஒரு மையத்தில் மட்டுமே உணவு தயார் செய்துள்ளீர்கள், மழையால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை என அரசுக்குதான் கேட்ட பெயர் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட அனைத்து தொகுதி மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அமைச்சர் திருமுருகன் அதிகாரிகளை ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

