/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கடைசி ஓவரில் மும்பை ஏமாற்றம்
/
பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கடைசி ஓவரில் மும்பை ஏமாற்றம்
பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கடைசி ஓவரில் மும்பை ஏமாற்றம்
பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கடைசி ஓவரில் மும்பை ஏமாற்றம்
ADDED : மார் 15, 2024 11:08 PM

புதுடில்லி: பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. 'எலிமினேட்டர்' போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஏமாற்றிய மும்பை அணி பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் மந்தனா 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (10), சோபி டெவின் (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ரிச்சா கோஷ் (14), சோபி மோலினக்ஸ் (11) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய எல்லிஸ் பெர்ரி (66) அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்தது. வேர்ஹாம் (18), ஸ்ரேயங்கா பாட்டீல் (3) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஹீலி மாத்யூஸ், நாட்-சிவர் பிரன்ட், சைகா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு யாஸ்திகா பாட்டியா (19), ஹேலி மாத்யூஸ் (15) நல்ல துவக்கம் கொடுத்தனர். நாட் சிவர்-பிரன்ட் (23) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமேலியா கெர் ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது ஹர்மன்பிரீத் (33) அவுட்டானார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. ஆஷா சோபனா பந்துவீசினார். முதல் 3 பந்தில் 4 ரன் கிடைத்தது. நான்காவது பந்தில் பூஜா (4) அவுட்டானார். கடைசி 2 பந்தில் 8 ரன் தேவைப்பட, 2 ரன் மட்டும் கிடைத்தது. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 130 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
பைனலில் (மார்ச் 17) பெங்களூரு, டில்லி அணிகள் மோதுகின்றன.

