/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது வங்கதேசம் * அயர்லாந்து அணி ஏமாற்றம்
/
கோப்பை வென்றது வங்கதேசம் * அயர்லாந்து அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது வங்கதேசம் * அயர்லாந்து அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது வங்கதேசம் * அயர்லாந்து அணி ஏமாற்றம்
ADDED : டிச 02, 2025 11:07 PM

சாட்டோகிராம்: அயர்லாந்துக்கு எதிரான 3வது 'டி-20'ல் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-1 என தொடரை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்ற அயர்லாந்து அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது, கடைசி போட்டி சாட்டோகிராமில் நடந்தது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டெர்லிங் (38), டெக்டர் (17) ஜோடி வேகமான துவக்கம் தந்தது. பின் வரிசையில் டாக்ரெல் (19), டிலானி (10) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 117 ரன்னில் ஆல் அவுட்டானது. வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் ரஹ்மான் 3, ரிஷாத் 3 விக்கெட் சாய்த்தனர்.
வங்கதேச அணிக்கு தன்ஜித், சைப் ஹசன் (19) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் லிட்டன் தாஸ் (7) ஏமாற்றினார். பின் தன்ஜித், பர்வேஸ் இணைந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். வங்கதேச அணி 13.4 ஓவரில் 119/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தன்ஜித் (55), பர்வேஸ் (33) அவுட்டாகாமல் இருந்தனர். 'டி-20' தொடரை 2-1 என வங்கதேசம் கைப்பற்றி, கோப்பை வென்றது.
5 'கேட்ச்'
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிரான 'டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக 'கேட்ச்' செய்த வீரர் என சாதனை படைத்தார் தன்ஜித் ஹசன் (5).

