/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணியில் கமலினி * இலங்கை தொடரில் வாய்ப்பு
/
இந்திய அணியில் கமலினி * இலங்கை தொடரில் வாய்ப்பு
ADDED : டிச 09, 2025 11:30 PM

புதுடில்லி: இந்திய பெண்கள் அணியில் தமிழகத்தின் கமலினி இடம் பெற்றுள்ளார்.
இந்தியா வரவுள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினம் (டிச. 21, 23), கடைசி 3 போட்டிகள் திருவனந்தபுரத்தில் (டிச. 26, 28, 30) நடக்க உள்ளன.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்திய உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து ராதா, உமா நீக்கப்பட்டனர்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த விக்கெட் கீப்பர் கமலினி 17, வைஷ்ணவி சர்மா 19, அறிமுக வாய்ப்பு பெற்றனர். பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் இருவரும் மும்பை அணிக்காக விளையாடுகின்றனர்.
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன், ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாக தொடர்கின்றனர். உலக கோப்பை தொடரின் அரையிறுதி, பைனலில் வாய்ப்பு பெற்ற ஷைபாலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணி விபரம்: ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தானா, தீப்தி, ஸ்னே ராணா, ஜெமிமா, ஷைபாலி, ஹர்லீன், அமன்ஜோத் கவுர், அருந்ததி, கிராந்தி, ரேணுகா, ரிச்சி கோஷ், கமலினி, ஸ்ரீசரணி, வைஷ்ணவி.

