/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
/
கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
ADDED : ஜன 11, 2025 08:34 PM

ஆக்லாந்து: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (66), குசால் மெண்டிஸ் (54), ஜனித் லியானகே (53), கமிந்து மெண்டிஸ் (46) கைகொடுத்தனர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 290 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 4, கேப்டன் சான்ட்னர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் (0), ரச்சின் ரவிந்திரா (1), டேரில் மிட்செல் (2), டாம் லதாம் (0), பிலிப்ஸ் (0) ஏமாற்றினர். மார்க் சாப்மேன் (81) ஆறுதல் தந்தார். நியூசிலாந்து அணி 29.4 ஓவரில் 150 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் அசிதா பெர்ணான்டோ, மகேஷ் தீக்சனா, எஷான் மலிங்கா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

