/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
அர்ஜென்டினா-அல்ஜீரியா மோதல் * வெளியானது உலக கோப்பை கால்பந்து அட்டவணை
/
அர்ஜென்டினா-அல்ஜீரியா மோதல் * வெளியானது உலக கோப்பை கால்பந்து அட்டவணை
அர்ஜென்டினா-அல்ஜீரியா மோதல் * வெளியானது உலக கோப்பை கால்பந்து அட்டவணை
அர்ஜென்டினா-அல்ஜீரியா மோதல் * வெளியானது உலக கோப்பை கால்பந்து அட்டவணை
ADDED : டிச 06, 2025 11:12 PM

வாஷிங்டன்: 'பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியானது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முதல் மோதலில் அல்ஜீரியாவை சந்திக்கிறது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன.
தொடர் துவங்க 187 நாள் உள்ள நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில், அணிகளுக்கான பிரிவு, போட்டி அட்டவணை தேர்வு நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், 'பிபா' தலைவர் இன்பான்டினோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அணி இடம் பெற்ற பிரிவை, அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார்.
முதல் மோதல்
இதன் படி அமெரிக்க அணி 'டி' பிரிவில் பராகுவே, ஆஸ்திரேலியா, தகுதிச்சுற்று அணியுடன் இடம் பெற்றது. நடப்பு சாம்பியன், மெஸ்சியின் அர்ஜென்டினா அணி, 'ஜே' பிரிவில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டானுடன் இடம் பெற்றது. 2026, ஜூன் 16ல் தனது முதல் போட்டியில் அர்ஜென்டினா, அல்ஜீரியாவை சந்திக்க உள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 'கே' பிரிவில் கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், தகுதிச்சுற்று அணியுடன் இடம் பிடித்தது.
48 அணிகள்
உலக கோப்பை கால்பந்தில் முதன் முறையாக 48 அணிகள் பங்கேற்க உள்ளன. முன்னதாக 1998 முதல் 2022 வரை அதிகபட்சம் 32 அணிகள் பங்கேற்றன.
104 போட்டி
பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாக (தலா 4) பிரிக்கப்பட்டு, லீக் முறையில் 72 போட்டி நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் 24, 3வது இடம் பெறும் சிறந்த 8 என, 32 அணிகள் 'ரவுண்டு-32' (16) சுற்றுக்கு தகுதி பெறும்.
* பின் 'ரவுண்டு-16' (8), காலிறுதி (4), அரையிறுதி (2), 3வது இடம் (1), பைனல் (1) என மொத்தம், இத்தொடரில் 104 போட்டி நடக்க உள்ளன.
சிக்கலில் இத்தாலி
தரவரிசையில் 'டாப்-11' இடத்திலுள்ள அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. 12வது இடத்திலுள்ள, 4 முறை சாம்பியன், இத்தாலி அணி, கடந்த இரு தொடருக்கு (2018, 2022) தகுதிபெறவில்லை.
இம்முறை, முதற்கட்ட வாய்ப்பை இழந்தது. அடுத்து, 22 அணிகள் பங்கேற்கும் 'பிளே ஆப்' சுற்றில் இத்தாலி விளையாடுகிறது. இதில் இருந்து 6 அணிகள் மார்ச் 31ல் (2026) தெரியவரும்.
யார்... யாருடன்
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்ற அணிகள் விபரம்:
1. பிரிவு 'ஏ': மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, தகுதிச்சுற்று அணி
2. பிரிவு 'பி': கனடா, கத்தார், சுவிட்சர்லாந்து, தகுதிச்சுற்று அணி
3. பிரிவு 'சி': பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து
4. பிரிவு 'டி': அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, தகுதிச்சுற்று அணி
5. பிரிவு 'இ': ஜெர்மனி, குராசோ, ஐவரி கோஸ்ட், ஈகுவடார்
6. பிரிவு 'எப்': நெதர்லாந்து, ஜப்பான், துனிஷியா, தகுதிச்சுற்று அணி
7. பிரிவு 'ஜி': பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து
8. பிரிவு 'எச்': ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே
9. பிரிவு 'ஐ': பிரான்ஸ், செனகல், நார்வே, தகுதிச்சுற்று அணி
10. பிரிவு 'ஜே': அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
11. பிரிவு 'கே': போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், தகுதிச்சுற்று அணி
12. பிரிவு 'எல்': இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

