ADDED : டிச 09, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேப்டவுன்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஹாக்கி போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள இந்திய ஹாக்கி அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. முதல் பாதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்காவின் தயான் (31), நீத்லிங் (37) அடுத்தடுத்து கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 49 வது நிமிடத்தில் மீண்டும் கைகொடுத்த ஹர்மன்பிரீத் சிங், ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது.

