/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்
/
அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்
ADDED : மார் 21, 2024 10:56 AM
சென்னை:அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டியில், தமிழக வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டி, அண்ணா டவர் பூங்காவில் நடந்து வருகிறது. இதில், நாட்டின் முன்னணி வீரர்கள் 32 பேர் உட்பட, 150 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த 'மெயின் டிரா' முடிவில், தமிழக வீரர்கள் பங்கேற்ற சுற்றில், ஸ்ரீகிருஷ்ணா 4 - 0 என்ற கணக்கில் செந்தில்குமாரையும், சசிகுமார் 4 - 1 என்ற கணக்கில் மனோஜ் தசரதனையும் தோற்கடித்தனர்.
அதேபோல் டில்லி வீரர் சந்தீப் குலாட்டி, 4 - 0 என்ற கணக்கில், தமிழக வீராங்கனை ஸ்ருதியை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீரர் புவனேஸ்வரன், 4 - 0 என்ற கணக்கில், கேரளா வீரர் வைஷாக்கை வீழ்த்தினார்.
தமிழக வீரர்களுக்கு இடையிலான மற்றொரு போட்டியில், விஜய் நிச்சானி, 4 - 0 என்ற கணக்கில் தமிழ்வாணனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

