/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாரத்தான், நடை, ஓட்டம் பயிற்சிக்காக வெளிநாட்டினர் மாமல்லை படையெடுப்பு
/
மாரத்தான், நடை, ஓட்டம் பயிற்சிக்காக வெளிநாட்டினர் மாமல்லை படையெடுப்பு
மாரத்தான், நடை, ஓட்டம் பயிற்சிக்காக வெளிநாட்டினர் மாமல்லை படையெடுப்பு
மாரத்தான், நடை, ஓட்டம் பயிற்சிக்காக வெளிநாட்டினர் மாமல்லை படையெடுப்பு
ADDED : ஆக 25, 2024 11:38 PM

மாமல்லபுரம்: பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு ஊழியர்கள், மாரத்தான், நடை, ஓட்டம் ஆகிய பயிற்சிகளுக்கு, மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
சென்னையை ஒட்டியுள்ள, பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில், பன்னாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.
மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன.
இத்தகைய நிறுவனங்களில், நிறுவன தலைமையிட நாட்டைச் சேர்ந்தவர்களே, முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். அவர்கள் நடை, ஓட்டம் உள்ளிட்ட உடல்நல பயிற்சிகள், மாரத்தான் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். விளையாட்டு வீரராக உள்ளனர்.
இச்சூழலில், உடல்நல பயிற்சிக்கும், மாரத்தான் ஓட்டத்திற்காகவும், மாதத்தில் ஒரு ஞாயிறன்று, மாமல்லபுரம் படையெடுக்கின்றனர்.
தனி வாகனத்தில் காலை 6:00 மணிக்கு வருவோர், இங்குள்ள சிற்ப பகுதி சாலைகள், பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை, கல்பாக்கம் அணுசக்தி தொழில்வளாக சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், தனியாக, குழுவினராக, 8:00 மணி வரை, இப்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
நேற்று பயிற்சியில் ஈடுபட்ட, ஜப்பான் நாட்டினர் கூறியதாவது:
மாமல்லபுரத்தில், ரசிக்கத்தக்க சிற்பங்கள், ரம்மியமான கடற்கரை ஆகியவை உள்ளன. மக்கள் நெரிசல் இல்லை. எங்களை கவர்கிறது.
பணியிடத்திலிருந்து, மாமல்லபுரம் தொலைவில் இருப்பினும், புத்துணர்வை விரும்பி, இங்கு பயிற்சி செய்கிறோம். உடல், மனம் புத்துணர்வு பெறுகிறது,
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

