/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டையார்பேட்டையில் கொடூரம் வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை
/
தண்டையார்பேட்டையில் கொடூரம் வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை
தண்டையார்பேட்டையில் கொடூரம் வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை
தண்டையார்பேட்டையில் கொடூரம் வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை
ADDED : ஏப் 28, 2024 04:46 AM

சென்னை, : சென்னை, தண்டையார்பேட்டை, நேரு நகர், காந்தி குறுக்கு தெருவை சேர்ந்த ரவுடி ஆனந்தன், 22. ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இவர் மீது கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
குற்றங்களில் இருந்து விடுபட்டு வாழ ஆட்டோ ஓட்டி வந்தார். ஆனந்தனுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாக நிலையில் நேற்று அவரது மனைவியை முட்டை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
முட்டை வாங்கி, ரோஜா வீட்டிற்கு திரும்பிய போது, ஆனந்தன் தலை, கை, கால் பகுதிகளில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தனை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
கொருக்குப்பேட்டை, சிவாஜி நகரை சேர்ந்த கார்த்திக், 19, தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த சதீஷ்குமார், 23 ஆகிய ரவுடிகள் ஆனந்தனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொலை செய்யப்பட்ட ஆனந்தனின் அண்ணன் சுரேஷ் என்பவரை, கடந்த ஜனவரி மாதம் முன்விரோதம் காரணமாக கார்த்திக் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், அண்ணனை வெட்டியவர்களை பழிவாங்க திட்டமிட்டதாக தெரிந்து, கார்த்திக், சதீஷ்குமார் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்தனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
தலைமறைவான கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

