முகையூர்- – கொடூர் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
முகையூர்- – கொடூர் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2026 03:41 PM
செய்யூர், ஜூலை 27-–
முகையூர் – கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் அருகே முகையூர் – -கொடூர் செல்லும் தார் சாலை 2.3 கி.மீ., துரம் கொண்டது. கொடூர், ஆட்சிவிளாகம், கொளத்துார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த சாலை வழியாக நகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த சாலை 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. மழை காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், முகையூர்- -– கொடூர் செல்லும் சாலையின் நடுவே பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. கொடூரில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை உள்ள 1 கி.மீ., துாரம் உள்ள இரு ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
ஆனால் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து முகையூர் வரை உள்ள 1.3 கி.மீ., அளவுடைய சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லவே தடுமாறுகின்றனர். அவதிப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
