/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது டாஸ்மாக் கடைக்கு பூட்டு பள்ளி மாணவர்கள் நிம்மதி
/
புது டாஸ்மாக் கடைக்கு பூட்டு பள்ளி மாணவர்கள் நிம்மதி
புது டாஸ்மாக் கடைக்கு பூட்டு பள்ளி மாணவர்கள் நிம்மதி
புது டாஸ்மாக் கடைக்கு பூட்டு பள்ளி மாணவர்கள் நிம்மதி
ADDED : பிப் 27, 2025 11:48 PM

கிளாம்பாக்கம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், சங்கர வித்யாலயா பள்ளி எதிரே உள்ள சிக்னல் அருகில், கடந்த 18ம் தேதி புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் போராடினர்.
கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சு நடத்தி, அவர்களை கலைய வைத்தனர். அன்று மதியம் முதல், புதிய டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடக்க துவங்கியது.
ஆனால், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை எவ்வித முகவரி, கடை எண் இல்லாமல் இயங்கி வருவதால், சட்டத்திற்குப் புறம்பாக அரசே மது விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக, செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின்படி, அந்த டாஸ்மாக் கடை குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் அந்த கடை திறக்கப்பட்டு, மது விற்பனை நடப்பது தெரியவர, கடைக்கு பூட்டு போடப்பட்டது.

